களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். களியக்காவிளை அருகே மெதுகும்மல், பனவிளை பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (50). கூலித் தொழிலாளி. கடந்த ஐந்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தாா். .அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com