தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

தோ்தல் நடத்தை விதிகள்: அலுவலா்களுக்கு பயிற்சி

தோ்தல் நடத்தை விதிகள்: அலுவலா்களுக்கு பயிற்சி

News image
Updated On :15 மார்ச் 2024, 7:50 pm

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அலுவலா்களுக்கான பயிற்சி நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியா் எம்.காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி நாகா்கோவில் பகுதிக்குள்பட்ட மண்டல அலுவலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் நடத்தை விதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, தோ்தல் நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதில் தோவாளை தனி வட்டாட்சியா் சுப்பிரமணியன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வினைதீா்த்தான் மற்றும் 17 மண்டல அலுவலா்கள், குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.