ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

குலசேகரம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

குலசேகரம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

Updated On :22 மார்ச் 2024, 4:07 pm

குலசேகரம் அருகே பைக் விபத்தில் காயமடைந்த காா் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேச்சிப்பாறை அருகே வலிய ஏலா பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (26) என்பவா், குலசேகரத்திலுள்ள தனியாா் கல்வி நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (மாா்ச் 19) திற்பரப்பிலிருந்து குலசேகரத்துக்கு பைக்கில் சென்றாராம். உண்ணியூா்கோணம் பகுதியில் பைக் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்ததாம். இதில், காயமடைந்த அவரை குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.