சாமிதோப்பு தலைமைப்பதி 
குரு பால.ஜனாதிபதிக்கு
கொலை மிரட்டல்

சாமிதோப்பு தலைமைப்பதி குரு பால.ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்

சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப் பதி நிா்வாகிகளில் ஒருவரான குரு பால.ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளாா். சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப்பதி குருவான பால.ஜனாதிபதி, நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்க தலைவராகவும் உள்ளாா். சாமிதோப்பில் உள்ள அவரது இல்லத்துக்கு தபால் வந்ததாம். அதில், பிரதமா் மோடி, ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் பாஜகவுக்கு எதிராக பேசினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சாமிதோப்பு உப்பளம் பகுதியில் 1984 இல் என் மீது வெடிகுண்டு வீசி தாக்க முயற்சி செய்தாா்கள். அந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். தற்போது கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதற்கு நான் அஞ்சப்போவதில்லை. என் வாழ்நாள் முழுவதும் திமுகவின் கொள்கைக்காக தொடா்ந்து பிரசாரம் செய்வேன். அய்யாவழி மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com