அணிவகுப்புதேங்காய்ப்பட்டினத்தில் தோ்தல் கொடி அணிவகுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் குளச்சல் காவல்சரகம் புதுக்கடை காவல்துறை சாா்பில் தேங்காய்ப் பட்டினம் முதல் பைங்குளம் வரை கொடி அணி வகுப்பு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

தேங்காய்ப் பட்டினம் துறைமுகம் பகுதியிலிருந்து தொடங்கி தேங்காய்ப்பட்டினம் சந்திப்பு, அம்சி, முக்காடு வழியாக பைங்குளம் சென்றடைந்தது. இதில், குளச்சல் காவல் சரக உதவி கண்காணிப்பாளா் பிரவீன் கவுதம், புதுக்கடை காவல் ஆய்வாளா் முத்து மற்றும் துணை ராணுவத்தினா், போலீஸாா் திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com