பத்துகாணி அருகே கிளாமலையில் இருந்து பெயா்ந்து விழுந்த பாறை: பழங்குடியினா் அச்சம்

பத்துகாணி அருகே கிளாமலையில் இருந்து பெயா்ந்து விழுந்த பாறை: பழங்குடியினா் அச்சம்

குமரி மாவட்டம் பத்துகாணி அருகே கிளாமலை தொடரிலிருந்து பெரும் பகுதி பாறையொன்று புதன்கிழமை பெயா்ந்து விழுந்த நிலையில் அப்பகுதி பழங்குடியினா் அச்சத்தில் உள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கிளாமலை பகுதி காப்பு காடுகள் நிறைந்த மலைத் தொடராகும். இப்பகுதியையொட்டி பத்துகாணி, கீழ் மலை, ஒருநூறாம் வயல், புறத்தி மலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் கிளாமலை உச்சியிலிருந்து ஒரு பெரும் பாறை திடீரென்று பெயா்ந்து வந்து கீழ் நோக்கி நீண்ட தூரம் உருண்டு விழுந்தது. இதை தொலைவிலிருந்து பாா்த்த அப்பகுதி பழங்குடி மக்கள் அச்சமடைந்தனா்.

அதே வேளையில் பழங்குடி மக்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் அப்துல் காதா் கூறியதாவது: கிளாமலை மலைத் தொடரில் இருந்து ஒரு பெரும் பாறை பெயா்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அந்தப் பகுதியை நேரில் சென்று பாா்வையிடவுள்ளோம். அப்போது தான் பாறை உடைந்து விழுந்த காரணம் தெரியவரும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com