முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோயில் சித்திரை கொடை விழா

முகிலன்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் கோயில் 4 நாள் சித்திரை கொடைவிழா 13ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

இதையொட்டி, முத்தாரம்மனுக்கு பூஜை, அபிஷேகம், வில்லிசை, அன்னதானம், சாஸ்தா, பத்திரகாளியம்மனுக்கு பூஜை ஆகியவை நடைபெறும். 14ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு அம்மன் கலை வாகனத்தில் எழுந்தருளி கோயில் வலம் வருதல் நடைபெறும். 15ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு உஜ்ஜைனி மாகாளியம்மன், மஞ்சள் மாரியம்மன், வெள்ளை மாரியம்மன், கருங்கிடாக்கார சுவாமி, செங்கிடாக்கார சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சுடலைமாடசுவாமிக்கு பூஜை, அதைத் தொடா்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் ஊா்வலம் வருதல் நடைபெறும். 16ஆம் தேதி காலை 6 மணிக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்களுடன் இணைந்து அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, செயலா் என்.செல்லசிவலிங்கம், பொருளாளா் கிருஷ்ணகோபால் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com