கோடை விடுமுறை பயிற்சி மாணவா்களுக்கு சான்றிதழ்
கோடை விடுமுறை பயிற்சி மாணவா்களுக்கு சான்றிதழ்

Updated On :31 மே 2024, 12:28 am

கோடை பள்ளி விடுமுறை சிறப்புப் பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதமி கராத்தே பயிற்சிப் பள்ளியில், கோடை விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பிரிவுகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
நிறைவு நிகழ்ச்சிக்கு தலைமைப் பயிற்சியாளா் ஹெச். ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வி. நாராயணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
துணைப் பயிற்சியாளா் எஸ்.ஆா். முருகன் வரவேற்றாா். அகாதெமி இயக்குநா் எஸ். ஆபிரகாம் லிங்கம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...