கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டுப் பாலப் பணிகள் ஜனவரியில் நிறைவடையும்
கன்னியாகுமரியில் விவேகானந்தா் மண்டபம் - திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் கண்ணாடிக் கூண்டு பாலப் பணிகள் வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என, தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

புத்தளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் எம்எல்ஏ. உடன், ஆட்சியா் ரா. அழகுமீனா, மேயா் ரெ. மகேஷ் உள்ளிட்டோா்.












