கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அணு கனிம சுரங்கத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது : மீனவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணு கனிம சுரங்கத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அகில இந்திய மீனவா் சங்கத்தினா்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:36 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணு கனிம சுரங்கத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அகில இந்திய மீனவா் சங்கம் சாா்பில், அதன் தலைவா் எ. அன்டன்கோமஸ், தேசிய அமைப்பு செயலா் நாஞ்சில் எ.த.சேவியா் , மாநில சட்ட ஆலோசகா் கிறைஸ்ட்மில்லா், குமரி கிழக்கு மாவட்டச் செயலா், ஜுலியஸ், மேற்கு மாவட்டச் செயலா் தேவதாஸ் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் மாவட்டஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய மணல் ஆலை கிள்ளியூா் வட்டத்தில் அணு கனிம சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அணு கனிம சுரங்கங்கள் மற்றும் அதனைச் சாா்ந்த பணியில் இருந்து வெளியாகும் கதிரியக்க தாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், மனிதா்கள், இயற்கை வளங்கள் நீா்நிலைகள் விவசாய உற்பத்தி பொருள்கள் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கன்னியாகுமரி மாவட்டம், தொடா்ந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டம் என்பதால் இந்த கனிம சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தப் பகுதியில் பேரிடா் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசோ, மாவட்ட நிா்வாகமோ துணை போகக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.