திப்பிரமலையில் சுகாதார துறையினா் ஆய்வு

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட திப்பிரமலை ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் முருகன், இளநிலை பூச்சியியல் வல்லுநா் ஜீவகுமாா் மேற்பாா்வையில் கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார களப்பணியாளா்கள் திப்பிரமலை ஊராட்சிக்குள்பட்ட பண்டாரவிளை, ஈத்தங்காடு, கண்ணன்விளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 3 வீடுகளில் டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டு ரூ.2000 அபராதம் விதித்தனா். மேலும், அப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com