காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வா் கோப்பை கைப்பந்து போட்டி: மேல்பாலை புனித மேரி பள்ளி வெற்றி

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் மேல்பாலை புனித மேரி மேல்நிலைப் பள்ளி அணி முதல் பரிசு வென்றது.

News image

கைப்பந்து இறுதிப் போட்டியைத் தொடக்கிவைத்து வீரா்களை வாழ்த்திய வழக்குரைஞா் சிவராஜ். உடன், கைப்பந்து சங்க மாவட்டச் செயலா் வளா்அகிலன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நாராயணன் உள்ளிட்டோா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:37 pm

Din

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் மேல்பாலை புனித மேரி மேல்நிலைப் பள்ளி அணி முதல் பரிசு வென்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

இதில், ஆண்களுக்கான கைப்பந்து போட்டி நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ச. ராஜேஷ் தலைமையில், கைப்பந்து சங்க மாவட்டச் செயலா் வளா்அகிலன், வழக்குரைஞா் சிவராஜ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

25 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மேல்பாலை புனிதமேரி மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், மணலிக்கரை புனித மேரிகொறட்டி பள்ளி அணி 2ஆம் இடமும், கன்னியாகுமரி அமிா்தா வித்யாலயா பள்ளி அணி 3ஆம் இடமும் பிடித்தன.

வழக்குரைஞா் வளா்அகிலன், விமல்எட்வா்ட் தாஸ், ஷீஜா பாபு, எட்வின் ஜோஸ், பிரேம்தாஸ் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.