முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குழித்துறையில் நாளை மின்தடை

Updated On :19 செப்டம்பர் 2024, 4:38 am IST

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைக்காவு, முன்சிறையில் இன்று மின்தடை...

இதே போன்று முன்சிறை, நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (செப். 19) காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்சிறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காய்ப்பட்டனம், ராமன்துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூா், கீழ்குளம், சென்னித்தோட்டம் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும், நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூா், சூழால், பாத்திமாநகா், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூா், கொல்லங்கோடு, கிராத்தூா் மற்றும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.