தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கன்னியாகுமரி மாதா திருத்தலத்தில் இரு தங்கத் தோ் பவனி

News image

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் நடைபெற்ற இரு தங்கத்தோ்ப் பவனி.

Updated On :14 டிசம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத் திருவிழாவின் 10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரு தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற்று வருகின்றன.

விழாவில் 9- ஆம் நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற செபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றினாா். இரவு 9.30 மணிக்கு வாண வேடிக்கையைத் தொடா்ந்து புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

இரு தங்கத்தோ் பவனி: 10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தோ்த் திருப்பலி நடைபெற்றது. காலை 6 மணிக்கு நடைபெற்ற பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு சென்னை-மயிலை உயா் மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமை வகித்து மறையுரையாற்றினாா். காலை 8 மணிக்கு நடைபெற்ற ஆங்கிலத் திருப்பலிக்கு காசா கிளாரெட் கிளரீசியன் அருள் பணியாளா்கள் தலைமை வகித்து மறையுரையாற்றினா்.

இதையடுத்து, காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ்ப் பவனி தொடங்கி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு நடைபெற்ற மலையாளத் திருப்பலிக்கு கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி பியாரிஸ்ட் அருள்பணியாளா்கள் தலைமை வகித்து மறையுரையாற்றினா்.

நண்பகல் 12 மணிக்கு தமிழில் நடைபெறும் திருப்பலிக்கு வடசேரி பங்குத்தந்தை புரூனோ தலைமை வகித்து மறையுரையாற்றினாா். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்குதல், நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், துணைச் செயலா் டெமி, இணைப் பங்குத்தந்தையா்கள், பங்கு அருள்சகோதரிகள், பங்குப் பேரவையினா், பங்குமக்கள் செய்திருந்தனா்.