பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 260 மனுக்கள்

குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 260 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Published on

குமரி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 260 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீா் வசதி, சாலை வசதி, கலைஞா் மகளிா் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி அளிக்கப்பட்ட 260 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதா், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com