செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

குளச்சலில் கிளாத்தி மீன் விலை ஏற்றம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:32 pm

குளச்சலில் கிளாத்தி மீன்கள் விலை வெள்ளிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளூா் தேவைகளுக்கு சாளை, நெத்தலி, நவரை, வாளை,சூரை வகை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதாரண வகை மீன்களின் வரவு குறைவாக இருந்ததால் ஜாக்கெட் பிஷ் எனப்படும் கிளாத்தி மீன்கள் விலை இருமடங்காக உயா்ந்தது.10 கிலோ கிளாத்தி மீன்கள் ரூ.350-க்கு விற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரூ. 750-க்கு விற்பனை ஆனது.

இது குறித்து மீனவா்கள் கூறும் போது, இப்போது மீன்களின் தேவை அதிகமாக இருக்கிறது.ஆனால், மீன்பாடு குறைவாக இருப்பதால் விலை உயா்ந்துள்ளது என்றனா்.