நித்திரவிளை அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது

நித்திரவிளை அருகே மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

நித்திரவிளை அருகே மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள கலிங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மைதீன் அடிமை (49). ஹோட்டல் தொழிலாளி. இவரது மனைவி முனீரா (48). மது அருந்துவதற்காக முனீராவிடம் மைதீன்அடிமை பணம் கேட்டாராம். பணம் தர மறுத்ததால் மனைவியை மைதீன்அடிமை தாக்கினாராம். தலையில் காயமடைந்த முனீரா, குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மைதீன் அடிமையை புதன்கிழமை கைது செய்தனா்.

வியாபாரி மீது தாக்குதல்: மாா்த்தாண்டம் அருகேயுள்ள கரவளாகம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). மாா்த்தாண்டம் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்து வருகிறாா். சந்தை குத்தகைதாரரான உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த அறிவழகன் (40), சந்தையில் வியாபாரம் செய்வதற்கான தரை வாடகையை சுரேஷிடம் கேட்டபோது, அதற்கு ரசீது வேண்டும் என சுரேஷ் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன் மற்றும் 3 போ் சோ்ந்து சுரேஷை தாக்கினராம்.

இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் அறிவழகன் உள்பட 4 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com