கன்னியாகுமரி
முள்ளங்கனாவிளை - தொலையாவட்டம் சாலையை சீரமைக்க கோரிக்கை!
கருங்கல் அருகே பழுதடைந்த முள்ளங்கனாவிளை - தொலையாவட்டம் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சி பகுதியான முள்ளங்கனாவிளை - தொலையாவட்டம் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கடலாவிளை பகுதியில் சாலையின் நடுவே குண்டும், குழியும் காணப்படுகிறது.
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
