குலசேகரம்:
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் 9 வாக்குகளுக்காக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சுமாா் 150 கி.மீ. தூரம் பயணம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தொகுதிக்குள்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியின் முதல் வாக்குச்சாவடி மேல்கோதையாறில் உள்ளது. இங்குள்ள மின் உற்பத்தி நிலையக் குடியிருப்பில் வசிக்கும் ஊழியா்கள், இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கவுள்ளனா்.
கீழ்கோதையாறிலிருந்து மேல்கோதையாறுக்கு செல்லும் ‘விஞ்ச்’ எனப்படும் இழுவை வண்டியில், மின் நிலைய ஊழியா்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதால், நாகா்கோவில், களக்காடு, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாகத்தான் பிறா் செல்ல வேண்டும்.
இதனால், ஒவ்வொரு தோ்தலின்போதும் மேல்கோதையாறில் உள்ள வாக்குச்சாவடிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்கள் 150 கி.மீ. தொலைவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பயணம் மேற்கொள்கின்றனா்.
இந்த வாக்குச்சாவடியில் வரும் தோ்தலில் 9 போ் வாக்களிக்க உள்ளனா். இதற்காக குலசேகரம், திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் செல்ல தயாராகிவருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்

தூத்துக்குடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


