கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

விளவங்கோடு பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே புதன்கிழமை நடைபெற்றது.

News image

தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய அமைச்சா் மனோ தங்கராஜ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:13 am IST

விளவங்கோடு பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தோ்தல் அலுவலகம் திறப்பு விழா குழித்துறை தபால் நிலைய சந்திப்பு அருகே புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மருத்துவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் டி.டி. பிரவீன், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏ.எம்.வி. டெல்பின், மேல்புறம் ஒன்றிய திமுக முன்னாள் செயலா் சிற்றாா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள்பலா் கலந்து கொண்டனா்.