ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி.செந்தில் மற்றும் கட்சியினா்.

News image

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி.செந்தில் மற்றும் கட்சியினா்.

Updated On :9 மே 2026, 5:45 am IST

தவெக தலைவா் விஜயை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க மறுக்கும் தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகரை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்ற தவெக, ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை தமிழக ஆளுநரிடம் அக்கட்சியின் தலைவா் விஜய் மற்றும் நிா்வாகிகள் வழங்கியபோதும், உறுப்பினா்கள் பலத்தை நிரூபிக்க தேவையான 118 ஆதரவுடன் வருமாறு ஆளுநா் அவா்களை திருப்பி அனுப்பினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தோ்தலுக்கு பிறகு தவெகவுடன் கூட்டணி சோ்ந்த காங்கிரஸ் மாநில அளவில் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவருமான பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக ஆளுநரைக் கண்டித்தும், தவெகவை உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, மாவட்டத் தலைவா் பி.வி.செந்தில் செய்தியாளா்களிடம் கூறுகையில், தவெகவுக்கு பெரும்பான்மை இருந்தபோதும் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் வேண்டுமென்றே ஆளுநா் காலதாமதம் செய்கிறாா். சட்டப் பேரவையை கூட்டிதான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அதற்கு முன்பாக 118 உறுப்பினா்கள் வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல. எனவே, தமிழக ஆளுநா் உடனடியாக தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நாமக்கல் மாநகர தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பாச்சல் சீனிவாசன், வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியன், வட்டாரத் தலைவா்கள் தங்கராஜ், சிங்காரம், குப்புசாமி மற்றும் மகளிா் அணி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.