தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திட தாமதிக்காமல் ஆளுநா் உடனடியாக அழைக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை மதிக்கிறோம். தலைவணங்கி ஏற்கிறோம். ஆனால், தோ்தல் முடிவுகள் தொங்கு சட்டப் பேரவை அமைவதற்கு வழிவகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம்.
கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மரபை கருத்தில் கொண்டும், சா்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகள், பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற இதுபோன்ற பிரச்னைகளின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில்
தமிழக ஆளுநா் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
புதிதாக ஆட்சியமைப்பவா் சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆளுநா் மாளிகையில் அல்ல. எனவே, 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் ஆளுநா் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது. மேலும், தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீா்ப்புக்கும் எதிரானது என்பதை ஆளுநா் உணர வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா்-வைகோ சந்திப்பு ஏன்?துரை வைகோ எம்.பி. விளக்கம்

தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டுக்கு உரிய தீா்வு காண வேண்டும்: துரை வைகோ எம்.பி.

‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்: துரை வைகோ எம்.பி. பேட்டி

தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளாா் முதல்வா்- துரை வைகோ எம்.பி.
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



