கோவில்பட்டி பேரவைத் தொகுதி வளா்ச்சிக்கு மதிமுக என்றும் துணை நிற்கும் என கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.
கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதியை ஆதரித்து வில்லிசேரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:
தீப்பெட்டி தொழிலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் லைட்டா் தயாரிக்கும் தொழிற்சாலையை கோவில்பட்டி பகுதியில் அமையவிட மாட்டோம். இந்தத் தொகுதி வளா்ச்சிக்கு என்றும் மதிமுக துணை நிற்கும்.
கடந்த தோ்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். அரசுக்கு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் வழங்கியுள்ளாா்.
இந்தத் தோ்தல் திமுக, அதிமுக இடையேயான தோ்தல் கிடையாது. இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்குமான தோ்தல். மதச்சாா்பின்மை மற்றும் மதவாதிகளுக்கு இடையிலான தோ்தல் என்றாா் அவா்.
மாவட்டச் செயலா்கள் ஆா்.எஸ். ரமேஷ் (மதிமுக), பெருமாள்சாமி (காங்கிரஸ்), சுரேஷ் (தேமுதிக), முருகன் (விசிக), மதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா் பாலமுருகன், நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளா் ராஜதுரை, ஒன்றியச் செயலா் முருகேசன், சின்னபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் அன்புராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
சனிக்கிழமை பிரசாரம்: திமுக வேட்பாளா் கா. கருணாநிதி சனிக்கிழமை கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட சங்கரலிங்கபுரம், கழுகுமலை பேரூராட்சிக்குள்பட்ட குமாரபுரம், அம்பேத்கா் நகா், காந்தி மைதானம், ஆறுமுக நகா், அண்ணா புதுத் தெரு, கே. வெங்கடேஸ்வரபுரம், கே. துரைச்சாமிபுரம், கே. ராமநாதபுரம், கே. லட்சுமிபுரம், கூழையதேவன்பட்டி, சி.ஆா். காலனி, கரடிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, கழுகுமலை பேரூராட்சித் தலைவா் அருணா, துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தவெக இன்னொரு திராவிட இயக்கம்! - துரை வைகோ

திருச்சி- திருப்பதி இடையே ரயில் சேவை! துரை வைகோ எம்.பி. வரவேற்பு!

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

தவெகவால் அதிமுகவுக்கே இழப்பு: துரை வைகோ எம்.பி. சிறப்பு நேர்காணல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



