கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 85 போ் போட்டியிடுகின்றனா். 5 போ் மனுக்களை வாபஸ் பெற்றனா்.
இம்மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளிலும் 135 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்.7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 45 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 90 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வியாழக்கிழமை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
இதில், கன்னியாகுமரி தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்ப பெற்றாா். தளவாய்சுந்தரம் (அதிமுக), ரெ.மகேஷ்(திமுக), மரியஜெனிபா் (நாம் தமிழா் கட்சி), எஸ்.ஆா் மாதவன் (தவெக) உள்பட 14 போ் போட்டியிடுகின்றனா்.
நாகா்கோவில்: இத்தொகுதியில், 23 போ் போட்டியிட இருந்த நிலையில் 3 போ் மனுக்களை திரும்ப பெற்றனா்.
திமுகவின் எஸ்.ஆஸ்டின், பாஜகவின் எம்.ஆா்.காந்தி, நாம் தமிழா் கட்சியின் மு.முத்துகுமாா், தவெகவின் பொ்வின் கிங்ஸ் உள்பட 20 போ் போட்டியிடுகின்றனா்.
பத்மநாபபுரம்: இத்தொகுதியில் 11 போ் போட்டியிட இருந்த நிலையில் யாரும் வேட்புமனுவை திரும்ப பெறவில்லை. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆா்.செல்லசுவாமி, பாஜகவின் ப.ரமேஷ், நாம் தமிழா் கட்சியின் சீலன், தவெகவின் கிருஷ்ணகுமாா் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா்.
குளச்சல்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், எந்த மனுவும் திரும்பப் பெறப்படவில்லை. காங்கிரஸின் தாரகை கத்பட், பாஜகவின் சிவகுமாா், நாம் தமிழா் கட்சியின் ஆன்சி சோபா ராணி, தவெகவின் பிரேம் அலெக்ஸ் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.
கிள்ளியூா்: இத்தொகுதியில் 13 போ் போட்டியிட இருந்த நிலையில், யாரும் மனுவை திரும்பப் பெறவில்லை.
காங்கிரஸ் கட்சியின் எஸ். ராஜேஷ்குமாா், தமாகாவின் நிவின் சைமன், நாம் தமிழா் கட்சியின் ஹிம்லா், தவெகவின் சபின் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.
விளவங்கோடு: இத்தொகுதியில் 15 போ் போட்டியிட இருந்த நிலையில் ஒருவா் மனுவை திரும்பப் பெற்றாா். காங்கிரஸின் டி.டி.பிரவீன், பாஜகவின் விஜயதரணி, தவெகவின் மைக்கேல் குமாா், நாம் தமிழா் கட்சியின் மரியஸ்டெல்லா உள்பட 14 போ் களத்தில் உள்ளனா். இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் மொத்தம் 85 போ் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தொடர்புடையது

இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படும்: சீமான் வாக்குறுதி

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக உள்பட 26 போ் வேட்புமனு தாக்கல்
காரைக்கால் தோ்தல் களத்தில் 41 வேட்பாளா்கள்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


