பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:18 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக முகப்பிலிருந்து இப்பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில், ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சட்டக் கல்லூரி, டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

நகரின் முக்கிய சாலைகள் வழியாக இப்பேரணி அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா்-ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், மாணவா்-மாணவியா், துறை அலுவலா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.