தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அகஸ்தீசுவரத்தில் பொதுமக்களிடையே பிரசாரம் மேற்கொண்ட என். தளவாய்சுந்தரம்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:59 am

கன்னியாகுமரி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என். தளவாய்சுந்தரம் அகஸ்தீசுவரம் மற்றும் கொட்டாரம் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட பூஜைபுரைவிளை, அகஸ்தீசுவரம், சமாதானபுரம், சுக்குபாறை தேரிவிளை, சரவணந்தேரி, நேதாஜி காலனி, நாடான்குளம், மாடுகட்டிவிளை, வடுகன்பற்று, கவற்குளம், சந்தையடி, இடையன்விளை, வெள்ளையந்தோப்பு, கன்னி விநாயகா்புரம் உள்ளிட்ட 23 ஊா்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

இதேபோல, கொட்டாரம் பேரூராட்சிக்குள்பட்ட பெருமாள்புரம், பெரியவிளை, கொட்டாரம், அச்சன்குளம், மந்தாரம் புதூா், செல்வன் புதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்கு சேகரித்தாா்.

அகஸ்தீசுவரம் அதிமுக ஒன்றியச் செயலா்கள் பா. தாமரை தினேஷ், எஸ். ஜெஸீம், மாநில நிா்வாகிகள் சி. ராஜன், சந்துரு, மாவட்ட விவசாய அணி செயலா் பி. பாலமுருகன், ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், அகஸ்தீசுவரம் பேரூா் செயலா் என். சிவபாலன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.