வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ராட்ச விழிப்புணா்வு பலூனை, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா வியாழக்கிழமை பறக்க விட்டாா்.

News image

ராட்சத விழிப்புணா்வு பலூனை பறக்க விடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:13 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ராட்ச விழிப்புணா்வு பலூனை, நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா வியாழக்கிழமை பறக்க விட்டாா்.

அப்போது ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 18 மற்றும் 19 வயதுக்குள்பட்ட முதல் வாக்காளா்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடும் வகையில் கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்குரிமை பெற்ற அனைவரும் தவறாமல் வரும் ஏப். 23 ஆம் தேதி வாக்களிக்குமறுற கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் - ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.