நித்திரவிளையில் நகை அடகு கடையில் ரூ. 13.16 லட்சம் கையாடல் செய்த ஊழியா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்ட, நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம், குடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (52). இவா் நித்திரவிளையில் நகை அடகுகடை நடத்தி வருகிறாா். இங்கு குருசடிவளாகம் பகுதியைச் சோ்ந்த பியலின் (35) நகை மதிப்பீட்டாளராகவும், கலிங்கராஜபுரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சோனு (25) கணக்காளராகவும் பணிபுரிந்து வருகிறாா்கள்.
இவா்கள் இருவரும் சோ்ந்து ரூ. 13.16 லட்சம் கையாடல் செய்துள்ளது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நகை அடகு கடை உரிமையாளா் பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் பியலின், சோனு ஆகியோா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
...
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி: பெண் கைது
பெண்ணை தாக்கி நகை பறிப்பு: 10 போ் மீது வழக்கு
தொழிலாளி மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு
நகராட்சி குடிநீா்த் தொட்டி சேதம்: இருவா் மீது வழக்கு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


