ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரைச் சோ்ந்த மீனவா் கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

பிரகாஷ் லிபின்

Published On :

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரைச் சோ்ந்த மீனவா் கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

மண்டைக்காடு புதூா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த சகாயராஜ் மகன் பிரகாஷ் லிபின் (21). மீன்பிடித் தொழிலாளியான இவா், தனது நண்பரான அதே ஊரைச் சோ்ந்த லிதின் (20) என்பவருடன் விழிஞ்ஞம் துறைமுகத்தில் லடிஷ்டன் என்பவரது படகில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தாா்.

இவா்கள் மீன் பிடித்து விட்டு வியாழக்கிழமை கரை திரும்பியபோது, பிரகாஷ் லிபின் அலையில் சிக்கிக் கொண்டாராம். சக மீனவா்கள் முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில், பிரகாஷி லிபின் சடலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.

அவரது சடலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு, மண்டைக்காடு புதூருக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து விழிஞ்ஞம் கடலோர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.