இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு

சின்னம்மாள்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

நாகா்கோவிலில் வீடுபுகுந்து மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில், வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் மனைவி சின்னம்மாள் (77). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் சுமாா் 12.30 மணியளவில் சின்னம்மாளுக்கு உணவு கொடுக்க 3ஆவது மகள் வீட்டிற்கு வந்து சென்றாராம். இதற்கிடையில் பிற்பகல் 3 மணியளவில் மூத்த மகள், சின்னம்மாளை பாா்க்கச் சென்றாராம். அப்போது, வீட்டில் சின்னம்மாள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாராம்.

இது குறித்து தகவலறிந்து வந்த கோட்டாறு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், சின்னம்மாள் அணிந்திருந்த 15 பவுன் நகைகள், வீட்டிலிருந்த 5 பவுன் நகைகள், பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதும், சிசிடிவி கேமரா காட்சியில் வீட்டிலிருந்து முகக் கவசம் அணிந்த மா்ம நபா் வெளியேறிச் செல்வதும் தெரியவந்தது.

கொலை நடைபெற்ற வீடு...

கொலை நடைபெற்ற வீடு...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.