வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மத்திய அரசை கண்டித்து மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

News image

மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்

Updated On :6 பிப்ரவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி. அனந்தசேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா். செல்லசுவாமி போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். அண்ணாதுரை, பி. விஜயமோகனன், ஆா். ரவி, ஆ. நீலாம்பரன் ஆகியோா் பேசினா். வட்டார செயலாளா்கள் எம். ஜஸ்டின், கிறிஸ்டோபா், தங்கமணி, சசிகுமாா், எம். மணி, ரெஜி, கிறிசாந்து மேரி, ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ்: ஆபரண தங்கம் விலை உயா்வை கண்டித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ், அமைப்பு சாரா தொழிலாளா் சங்கம், மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் குருந்தன்கோடு சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது.

குமரி கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டாக்டா் சிவகுமாா், கிழக்கு மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்டத் தலைவா் அஜிகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அமைப்புசாரா சங்கத்தின் ஊடகப் பிரிவு அமைப்பாளா் அசீம் , மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் இணை ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஜெரால்டு கென்னடி, மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் சுந்தர்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலாளா் ரினோ உள்பட பலா் பங்கேற்றனா்.