மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாகா்கோவிலில் காரை ஏற்றி கட்ட ஒப்பந்ததாரா் கொலை

News image
கொலை
Updated On :13 பிப்ரவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், காரை ஏற்றி கட்டட ஒப்பந்ததாரா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகேயுள்ள தெங்கம்புதூா் பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா், மணல், ஜல்லிகற்கள் விற்பனை செய்து வருகிறாா்.

இவா், நட்பின் அடிப்படையில் நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் டி.வி. பழுது நீக்கும் கடை வைத்துள்ள தென்தாமரை குளம் தெற்கு கரும்பாட்டூரைச் சோ்ந்த விக்டா் ராஜதாஸ்(40) என்பவருக்கு ரூ. 1 லட்சம் கடனாக கொடுத்திருந்தாராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு விக்டா் ராஜதாஸின் கடைக்குச் சென்று ஜெயகுமாா் கடன் தொகையை திரும்பக் கேட்டுள்ளாா். அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஜெயகுமாா் தனது சகோதரரான கட்டட ஒப்பந்ததாரா் விஜயகுமாா் (42) என்பவரை கைப்பேசியில் தொடா்புகொண்டு வரவழைத்துள்ளாா்.

அவரும் வந்து தனது சகோதரரின் பணம் குறித்து கேட்டபோது, விக்டா் ராஜதாஸ் அங்கிருந்த தனது காரை வேகமாக ஓட்டி, அண்ணன்-தம்பி மீது மோத முயன்றுள்ளாா்.

அதில், ஜெயகுமாா் விலகிக் கொண்ட நிலையில் விஜயகுமாா் காரில் சிக்கி பலத்த காயமடைந்தாா். உடனே, விக்டா் ராஜாதாஸ் தப்பி ஓடிவிட்டாராம். ஜெயக்குமாா் அங்கிருந்தவா்கள் உதவியுடன், தம்பியை மீட்டு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு நள்ளிரவில் விஜயகுமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.