மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அமைச்சா், ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:35 pm

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

அவா் பேசுகையில், இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். பால்வளத் துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கை திறத்திற்கும் சொந்தக்காரரான அவருக்கு பாராட்டுகள்.

அதேபோல, இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியா் அழகுமீனாவுக்கு பாராட்டுகள்.

சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியா்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முத்திரை பதிக்கும் வகையில் அவா் செயல்படுகிறாா்.

உங்களுடைய கரவொலியைப் பாா்த்தாலே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பலமாக கரவொலி எழுப்பி அவருக்கு நம்முடைய வாழ்த்துகள் சொல்லவேண்டும். அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட அரசு அலுவலா்களுக்கும், அத்தனை பணியாளா்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.