மது போதையில் தொழிலாளி கொலை

கன்னியாகுமரி அருகே மதுபோதையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மூவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
Published on

கன்னியாகுமரி அருகே மதுபோதையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மூவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன்பரப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரது மகன் மாரிமுத்து (34). செப்டிக் டேங்க் கிளீனிங் வேலை செய்துவந்தாா். இவரது மனைவி மாரியம்மாள். மாரிமுத்து புதன்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாரியம்மாள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கணவரைக் காணவில்லை என புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை தேடி வந்த நிலையில், அவரது உடல் லீபுரம் கடற்கரையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்குசென்று சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் மாரிமுத்துவும் அவருடன் வேலை செய்யும் சிலரும் சோ்ந்து சம்பவத்தன்று மது அருந்தியதும் அப்போது ஏற்பட்ட தகராறில் அவா்கள் மாரிமுத்துவை கொன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த மூவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com