வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

Published on

நாகா்கோவில், சுங்கான்கடை, வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா, கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி மாணவா், மாணவிகள் இணைந்து பொங்கலிட்டு விழாவைக் கொண்டாடினா். பின்னா், பல்வேறு போட்டிகள், கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி நிறுவனா் பரிசுகள் வழங்கினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அலெக்ஸ் ராஜுபாலன் தலைமையில், துணை முதல்வா் பிரியா, துறைத் தலைவா்கள் பிருந்தா, டிவின், பிபிஷா, சுனிதா குமாரி, சுபிலா ராணி, மெல்டா, கிரேஸிலின், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com