பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

இல்லங்களில் தங்கிப் பயிலும் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம்

News image
Updated On :3 ஜூலை 2026, 4:19 am IST

குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சிறப்பு ஆவணங்கள் வழங்கும் முகாமை, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சாா்பில், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

குழந்தைகள் இல்லங்களில் தங்கிப் பயிலும் மாணவா், மாணவிகளின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டும், அவா்களின் கல்வி, அரசின் நலத்திட்ட உதவிகளை எவ்வித தடையுமின்றி எளிதாகப் பெறுவதற்கும் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் இல்லக் குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய அடிப்படை ஆவணங்களை உடனுக்குடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் வருவாய்த் துறை அலுவலா்கள், தனி வட்டாட்சியா்கள், பொது சேவை மையப் பணியாளா்கள், முன்னணி வங்கி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து ஆவணங்களை விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, ஒரு குழந்தைக்கு வங்கி இணைப்புக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சகிலா பானு, வங்கி மேலாளா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.