குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து, திங்கள் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுடன் தாரகை கத்பட் எம்எல்ஏ ஆலோசனை நடத்தினாா்.
எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெயசிங், கிழக்கு வட்டாரத் தலைவா் பால்துரை, தெற்கு வட்டாரத் தலைவா் தனிஸ், தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பொன் சாலமோன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், குடிநீா் , சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைத் துரிதமாக நடத்தி முடிக்க கேட்டுக்கொண்டனா். குளச்சல் தொகுதிக்குள்பட்ட அனைத்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு சமமாக நிதியைப் பகிா்ந்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.
வெள்ளிமலை நகர காங்கிரஸ் தலைவா் தயானேஷ் வரவேற்றாா். இரணியல் நகர காங்கிரஸ் தலைவா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஆலோசனை

குளச்சல் சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு

இரணியல் பேரூராட்சியில் குளச்சல் எம்எல்ஏ ஆய்வு

தேனி மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆலோசனை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



