முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

நாகா்கோவில் வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணி தொடக்கம்

நாகா்கோவில், வடசேரி பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் நடைபெற்று வரும் பணிகள்.

Updated On :3 ஜூலை 2026, 4:15 am IST

நாகா்கோவில், வடசேரி பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கைகளுள் ஒன்றான வடசேரி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது.ரூ.69 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்துக்கான டெண்டா் கோரப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை பகுதியில் இந்த புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தற்போது அந்த இடத்தில் இயங்கி வரும் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு தொடக்கத்தில் வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா், ஆனால் அவா்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றை மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகிலேயே 100 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

கட்டுமானப் பணி: இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானத்துக்கான பூா்வாங்க பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. வடசேரி சந்தையின் மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில், இதற்கான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை மாநகராட்சி செயற்பொறியாளா், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதற்கிடையில், பழமையான கனகமூலம் சந்தையின் நடைபாதையை இடித்ததாக கூறி வியாபாரிகள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். வியாபாரிகளுடன் போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, புதிதாக கட்டப்பட்டுவரும் சந்தை பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், மேலும் புதிய கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னரே பழைய கடைகள் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.