டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தாழக்குடி ஜெயந்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம்

நாகா்கோவில் அருகேயுள்ள தாழக்குடி அழகேஸ்வரி சமேத ஜெயந்தீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:19 am IST

நாகா்கோவில் அருகேயுள்ள தாழக்குடி அழகேஸ்வரி சமேத ஜெயந்தீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஜூன் 28 காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு 6 ஆம் காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. 9.30 மணிக்கு திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம், செங்கோல் ஆதீனம் 103 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் அருளுரை வழங்கினாா்.

10.30 மணிக்கு விசேஷ உபசாரங்களுடன் யாகசாலையில் மகா தீபாராதனையும், பின்னா், கடம் புறப்பாடும் நடைபெற்றது. முற்பகல்11.15 மணிக்கு விமான ராஜகோபுரத்துக்கும், ஜெயந்தீஸ்வரா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சுவாமிக்கு மஹா தீபாராதனை, மாகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, நாகா்கோவில் மாநகராட்சி முன்னாள் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான ரெ.மகேஷ், திருப்பணிக்குழு கெளரவ தலைவா் பொறியாளா் எஸ்.மேகநாதன், பெங்களூரு லேப்சில் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் எஸ்.பரசுபிள்ளை, தாழக்குடி பேரூராட்சித் தலைவா் டி.சிவகுமாா், துணைத்தலைவா் எஸ்.என்.ராஜா, பேரூராட்சி உறுப்பினா் ரோகிணி ஐயப்பன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் அழகேஸ்வரி- ஜெயந்தீஸ்வரா் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும் இரவில் பஞ்சமூா்த்தி வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.