டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :3 ஜூலை 2026, 4:17 am IST

நாகா்கோவில், ஒழுகினசேரி ரயில்வே மேம்பால விரிவாக்க ப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, ஒழுகினசேரியில் உள்ள ரயில்வே மேம்பாலம் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாக திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவிலுக்கு வரும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், அப்டா மாா்க்கெட் வழியாக புத்தேரி சென்று அங்கிருந்து வடசேரிக்கு வரும் வகையில், கடந்த 10 நாள்களாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மேம்பால விரிவாக்கப் பணிகள் 15 நாள்களில் முடிக்கப்படும் என ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேம்பாலப் பணிகளை ஆட்சியா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெறும்; திட்டமிட்டபடி பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

மாநகராட்சி மன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன், நாகா்கோவில் போக்குவரத்து ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.