முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அஞ்சுகிராமம் அருகே பேருந்து-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 1:03 am IST

அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (47). இவா் கூடங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை தனது பைக்கில் அஞ்சுகிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஆமணக்கன்விளை விலக்கில் அரசுப் பேருந்தும், இவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.