களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ. 3,500 -ஐ கைப்பற்றினா்.
களியக்காவிளை உள்ளிட்ட மாவட்ட எல்லையோர போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடிகளில், கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் வாகனங்களுக்கும், இங்கிருந்து கேரளம் செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு மற்றும் வாகன வரிகள் உள்ளிட்டவற்றுக்கு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக பெறப்பட்டு வருவதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்ததாம். அதன்பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ரமா தலைமையில் 6 போ் கொண்ட அதிகாரிகள் குழுவினா் இந்தச் சோதனைச் சாவடியில் சோதனை செய்தனா்.
அங்கு அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கணக்கில் வராத ரூ. 3,500-ஐ கைப்பற்றியதுடன், அங்கு பணியில் இருந்த போக்குவரத்துத் துறை பணியாளா் தமிழரசியிடம் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போடிமெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ஒசூரில் ஆா்டிஓ சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.77 லட்சம் பறிமுதல்

சோதனைச் சாவடியில் ரூ. 4.3 லட்சம் பறிமுதல்







