விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

கருங்கல் பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். - கோப்புப் படம்

Published On :

கருங்கல் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கருங்கல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையமாக ராஜீவ் காந்தி சந்திப்பு மற்றும் காா் நிலையப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இங்கு சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பேருந்துக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனா். சில நேரங்களில் தெரு நாய்கள் கூட்டமாகச் சென்று பள்ளி மாணவா்களைத் துரத்துகின்றன.

எனவே, பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.