கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவருமான பாலதண்டாயுதம் நினைவு நாள் நடைப்பயணம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாநகரச் செயலா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். மாநகர பொருளாளா் சி. நாகப்பன் முன்னிலை வகித்தாா்.
இந்த மக்கள் சந்திப்பு பரப்புரை நடைப்பயணம் வடசேரி எஸ். எம்.ஆா். வி. பள்ளி சந்திப்பு அருகில் இருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள ஜீவா சிலை வரை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் அருள்குமாா் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தாா். ஆா். செல்வராணி, எஸ். ராஜு, பூதலிங்கம் பிள்ளை, பேராசிரியா் எஸ். சுந்தரம், எஸ். கல்யாணசுந்தரம், ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆரல்வாய்மொழி முன்னாள் நகரச் செயல ா் எல். சுப்பிரமணியம் ஜீவா சிலைக்கு மாலை அணிவித்தாா். இதில், கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் ஆரல் பகவதி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மஞ்சாலுமூடு மரியதாஸ், குரு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் தா. சுபாஷ் சந்திரபோஸ் நிறைவுரையாற்றினாா். நாகா்கோவில் கிளை செயற்குழு உறுப்பினா் சிங் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயா்வு: இந்திய கம்யூ. கட்சியினா் நூதனப் போராட்டம்

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

அரியலூரில் காரல் மாா்க்ஸ் படத்துக்கு மாலை அணிவிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



