தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

திருநங்கைகள் வீடு கட்டுவதற்கான நிதியை விடுவிக்க ஆட்சியரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

20 திருநங்கைகளுக்கு வீடு கட்டும் பணிக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் வலியுறுத்தப்பட்டது.

News image

ஆட்சியா் மு. பிரதாப்பிடம் மனு அளித்த என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, திருநங்கைகள்.

Updated On :3 ஜூன் 2026, 4:55 am IST

20 திருநங்கைகளுக்கு வீடு கட்டும் பணிக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, செவ்வாய்க்கிழமை 20 திருநங்கைகளுடன் சென்று ஆட்சியரிடம் அளித்த மனு: கன்னியாகுமரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோவாளை ஒன்றியம், சகாயநகா் ஊராட்சி, வீரமாா்த்தாண்டன்புதூரில் 20 திருநங்கைகளுக்கு ஊரக வளா்ச்சி- ஊராட்சித் துறை சாா்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கு, கடந்த பிப். 20இல் ஆட்சியரால் உத்தரவு வழங்கப்பட்டது.

அதன்பேரில், திருநங்கைகள் வீடு கட்டும் பணியைத் தொடங்கினா். ஆனால், முதல்கட்ட நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால், அவா்கள் சிரமப்படுகின்றனா். மேலும், வீடுகளுக்கு குடிநீா், மின்சாரம், போக்குவரத்து சிறுபாலம் போன்ற வசதிகள் செய்யப்படவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், திருநங்கையரின் வீடுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதுடன், கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல சிறுபாலம் அமைத்துக் கொடுத்து பணிகளை நிறைவேற்றவும், முதல்கட்ட நிதியை விரைந்து வழங்கவும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், மின்துறை கண்காணிப்புப் பொறியாளருக்கு அறிவுறுத்தினாா்.

அதிமுக நிா்வாகிகள் ஜெயகோபால், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.