வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

களியக்காவிளை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:31 am IST

களியக்காவிளை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் குந்நுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பேபிகுமாா் மகள் கீது (27). இவா், தனது மூன்று மாத குழந்தையுடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், கீதுவின் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி, குழந்தையின் கையில் அணிந்திருந்த அரை பவுன் கைச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாா்த்தாண்டம் உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், களியக்காவிளை காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன், உதவி ஆய்வாளா் மகேந்த் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், புல்லந்தேரி, அயிந்திதோட்டம் புத்தன்வீட்டைச் சோ்ந்த சிமிகுட்டன் (40) என்பவா் இத்திருட்டி ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.