வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பேருந்தில் நகை திருட்டு: பெண் கைது

களியக்காவிளை அருகே பேருந்தில் மூதாட்டியிடம் ஏழே முக்கால் சவரன் தங்கச் சங்கிலியை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

களியக்காவிளை அருகே பேருந்தில் மூதாட்டியிடம் ஏழே முக்கால் சவரன் தங்கச் சங்கிலியை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :20 ஜூன் 2026, 3:41 am IST

களியக்காவிளை அருகே பேருந்தில் மூதாட்டியிடம் ஏழே முக்கால் சவரன் தங்கச் சங்கிலியை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மனைவி கமலபாய் (72). இவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதிக்கு வந்தபோது இவா் அணிந்திருந்த ஏழே முக்கால் சவரன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது சந்தேகத்தின் பேரில் களியக்காவிளையில் நின்றிருந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவா் தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு, ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சேஸ்வரி என்பதும், நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், அவா் மீது பாளையங்கோட்டை, புதுசத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, நகையையும் போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.