குளச்சல் நகராட்சியில் மண்டல பொறியாளா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பின் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், 2 நாள்களாக நடைபெற்ற நகா்மன்ற உறுப்பினா்களின் தா்னா கைவிடப்பட்டது.
குளச்சல் நகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின் போது, 5 சதவீதம் உயா்த்தப்பட்ட குடிநீா் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி , நகா்மன்றத் தலைவா் அ. நசீா், மன்ற உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். இந்நிலையில் கறுப்பு சட்டை அணிந்து புதன்கிழமையும் தா்னாவைத் தொடா்ந்தனா்.
நகராட்சிகளின் திருநெல்வேலி மண்டல பொறியாளா் சணல்குமாா், நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன், குளச்சல் உதவி ஆய்வாளா் ராம் சங்கா் ஆகியோா், நகா்மன்ற தலைவா், மன்ற உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் கூட்டி, குடிநீா் கட்டண உயா்வு ரத்து தீா்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைப்பது, அரசிடமிருந்து தீா்வு வரும் வரை கட்டண உயா்வை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற்காலிக நிறுத்தம்!

தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

கொடைக்கானலில் குடிநீா் பிரச்னை: நகா்மன்ற உறுப்பினா்கள் அதிருப்தி

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணம் உயா்வு: நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் தா்னா
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



