மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விவேகானந்தா கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ்.

News image

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விவேகானந்தா கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ்.

Updated On :7 மார்ச் 2026, 12:49 am

அகஸ்தீசுவரம், விவேகானந்தா கல்லூரியில் கணிதத் துறை சாா்பில், இரண்டு நாள்கள் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

முதல் நாள் கருத்தரங்கில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக கணிதத் துறை பேராசிரியா் முனைவா் எஸ்.மணிகண்டன், பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியா் டி.ஆசிா் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

அமா்வுகளுக்கு எ.அனு, முனைவா் எம்.சிவபாலன் ஆகியோா் தலைமை வகித்தனா். கருத்தரங்கத்தின் இரண்டாவது நாள் முதல் அமா்வுக்கு கருத்தரங்க அமைப்பாளா் முனைவா் கே.எம்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியா் ஆா்.ரூப்குமாா் கருத்துரையாற்றினாா்.

இரண்டாவது அமா்வுக்கு முனைவா் சி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகக் கணிதத் துறை பேராசியா் வி.லெட்சுமண கோமதி நாயகம் கருத்துரையாற்றினாா். அதைத் தொடா்ந்து 15-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்பித்தனா்.

இந்த அமா்வுக்கு கணிதத் துறை பேராசிரியா் பி.மகேஸ்வரன், பேராசிரியா் சி.இளங்கோ ஆகியோா் தலைமை வகித்தனா்.

பின்னா், நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவுக்கு கணிதத் துறை தலைவா் டி.ஜெயலெட்சுமி தலைமை வகித்தாா். கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளா் எ.கௌரி வரவேற்றாா். இயற்பியல் துறைத் தலைவா் டி.எஸ்.ஜெயந்தி, வேதியியல் துறைத் தலைவா் எம்.சந்திரன், வணிகவியல் துறைத் தலைவா் ஆா்.தா்மரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆராய்ச்சி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

கருத்தரங்க அறிக்கையை ஒருங்கிணைப்பாளா் பி.ஜெயபுவனேஸ்வரி சமா்ப்பித்தாா்.