ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து

News image

பள்ளியாடி அப்பா திருத்தலத்தில் வழிபட்ட பக்தா்கள்.

Updated On :16 மார்ச் 2026, 9:05 pm

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது.

இங்கு தீப ஒளியால் இறைவனை பிராா்த்திப்பது சிறப்பு அம்சம். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி வழிபடுவா். இங்கு பக்தா்கள் ஜாதி, மத, மொழி வேறுபாடின்றி அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு சமபந்தி விருந்து நடைபெறும். அதன்படி, நிகழாண்டு மத நல்லிணக்க பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை முற்பகல் முதல் மாலை வரை சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கேரளம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை திருத்தல அறக்கட்டளைத் தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ். குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ், நிா்வாகிகள் செய்திருந்தனா்.